ராம்நகர் மீது குமாரசாமிக்கு பொங்குது பாசம்!

Added : ஜன 28, 2022
Advertisement
ராம்நகர் : ''என்னை ராம்நகரிலிருந்து விரட்ட, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் முயற்சிக்கிறார். இதற்கு அவர், 10 ஜென்மம் எடுத்து வர வேண்டும்,'' என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி சாடினார்.ராம்நகரில் அவர் நேற்று கூறியதாவது:ராம்நகரிலிருந்து என்னை காலி செய்ய சிவகுமார் முற்பட்டுள்ளார். என்னை காலி செய்ய அவரால் முடியுமா?ராம்நகருக்கும், எனக்கும் உள்ள பந்தம் குறித்து, 1,000
 ராம்நகர் மீது குமாரசாமிக்கு பொங்குது பாசம்!

ராம்நகர் : ''என்னை ராம்நகரிலிருந்து விரட்ட, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் முயற்சிக்கிறார். இதற்கு அவர், 10 ஜென்மம் எடுத்து வர வேண்டும்,'' என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி சாடினார்.



ராம்நகரில் அவர் நேற்று கூறியதாவது:ராம்நகரிலிருந்து என்னை காலி செய்ய சிவகுமார் முற்பட்டுள்ளார். என்னை காலி செய்ய அவரால் முடியுமா?ராம்நகருக்கும், எனக்கும் உள்ள பந்தம் குறித்து, 1,000 முறை கூறிவிட்டேன். இம்மாவட்டத்தை என் இதயத்தில் வைத்துள்ளேன். இது தாய், மகன் சம்பந்தம்.பணம், அடக்குமுறையால் என்னை பணிய வைக்கலாம் என அவர் நினைக்கிறார். இதற்கு 10 ஜென்மம் எடுத்து வர வேண்டும். ராம்நகர் மாவட்ட மக்களுக்கும், தேவகவுடா குடும்பத்துக்கும் பூர்வ ஜென்ம பந்தம் உள்ளது.பாதயாத்திரைக்கு பின், ம.ஜ.த., பாதுகாப்பு கோட்டையை சிதைக்க முயற்சித்தால், அது முடியாது; அவர் இன்னும் 10 முறை பாதயாத்திரை நடத்தட்டும். நான் அகங்காரத்தால் பேசவில்லை.மாவட்ட மக்கள் அலசி, ஆராய்ந்து முடிவெடுப்பர்.

நம் உழைப்பு, அன்பு, நம்பிக்கை இருந்தால் மட்டுமே, நிலைத்திருக்க வேண்டும். பணத்துக்கு மக்கள் மயங்கமாட்டார்கள்.எங்கள் கட்சியின் புட்டராஜூ உட்பட சில தலைவர்கள், சித்தராமையாவை சந்தித்தது பற்றி எனக்கு தெரியாது.அவர்கள் யாரை சந்தித்தால் எனக்கென்ன? யார், யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்; விவாதிக்கலாம். எனக்கு என் கட்சி, தொண்டர்கள், மக்கள் முக்கியம். தொண்டர்கள் இருந்தால்தான், தலைவர்கள் வளர்வர்.பலரும் ம.ஜ.த.,வால் முன்னேறினர்.

அதன்பின் கட்சியை விட்டு செல்கின்றனர். ம.ஜ.த., தொண்டர்களுக்கு, தலைவர்களை வளர்க்கும் சக்தியுள்ளது. 2023ன் தேர்தலில் எங்கள் கட்சியின் சக்தி தெரியும்.இப்ராகிம், எங்களுக்கு பழையவர். தேவகவுடா பாசறையில் வளர்ந்தவர். சித்தராமையாவுடன் சென்று, தேவகவுடாவை பிரிந்ததாக இப்ராகிம் கூறியுள்ளார்.அவரது விருப்பப்படி, அடுத்தமுறை ம.ஜ.த., ஆட்சிக்கு வர வேண்டும். அவர் ம.ஜ.த.,வுக்கு வந்தால் வரவேற்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X