சண்டிகர்:பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தன் தாய், சகோதரியை வீட்டில் இருந்து துரத்தியதாக, மற்றொரு சகோதரி சுமன் டூர் குற்றம் சாட்டியுள்ளார்.
பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபை தேர்தல் பிப்., 20ல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநில காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மீது, அவரது மூத்த சகோதரி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான சித்துவின் சகோதரி சுமன் டூர், சண்டிகரில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:தன் 2 வயதில் பெற்றோரை பிரிந்ததாக சித்து கூறி உள்ளது அப்பட்டமான பொய். அதை நிரூபிக்க தேவையான புகைப்பட ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.எங்கள் தந்தை 1986ல் இறந்தபின், சொத்துக்களை அபகரிக்க முடிவு செய்த சித்து, எங்கள் தாய் மற்றும் மற்றொரு சகோதரியை வீட்டில் இருந்து வெளியேற்றினார்.
எங்கள் தாய் 1989ல் டில்லி ரயில் நிலையத்தில் அனாதையாக இறந்து கிடந்தார். சகோதரியும் இறந்த பின் தான் இந்த விபரங்கள் தெரியவந்தன. என் உறவையும் அவர் முழுமையாக துண்டித்துக் கொண்டார். சமீபத்தில் அவரது வீட்டிற்கு சென்றபோது சந்திக்க மறுத்துவிட்டார்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.இந்த குற்றச்சாட்டுகளுக்கு சித்து இதுவரையிலும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement