ம.ஜ.த.,வின் அடுத்த விக்கெட் எம்.எல்.ஏ., புட்டராஜு?

Added : ஜன 28, 2022
Advertisement
பெங்களூரு : மேலுகோட்டே ம.ஜ.த., - எம்.எல்.ஏ., புட்டராஜு, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.கர்நாடக ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக வேறு கட்சிகளுக்கு தாவுகின்றனர். சாமுண்டீஸ்வரி தொகுதியின் ஜி.டி.தேவகவுடா, கோலாரின் சீனிவாச கவுடா என, சிலர் காங்கிரசுக்கு செல்ல தயாராகின்றனர்.இந்நிலையில் மாண்டியா மேலுகோட்டே

பெங்களூரு : மேலுகோட்டே ம.ஜ.த., - எம்.எல்.ஏ., புட்டராஜு, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.



கர்நாடக ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக வேறு கட்சிகளுக்கு தாவுகின்றனர். சாமுண்டீஸ்வரி தொகுதியின் ஜி.டி.தேவகவுடா, கோலாரின் சீனிவாச கவுடா என, சிலர் காங்கிரசுக்கு செல்ல தயாராகின்றனர்.இந்நிலையில் மாண்டியா மேலுகோட்டே எம்.எல்.ஏ., புட்டராஜு, நேற்று முன்தினம் இரவு, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை சந்தித்து பேசினார்.

அப்போது ஜமிர் அகமது கானும் அங்கிருந்தார்.சமீபநாட்களாக புட்டராஜு, ம.ஜ.த., தலைவர்களிடமிருந்து விலகி உள்ளார். ஏற்கனவே ஒருமுறை சித்தராமையாவை சந்தித்திருந்த புட்டராஜு, நேற்று முன்தினம் இரவு மீண்டும் சந்தித்து பேசினார். இவர் காங்கிரசில் சேர விரும்புவதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X