லக்னோ : '' தேர்தல் பிரசாரத்துக்கு உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகருக்கு என்னை செல்ல விடாமல், டில்லியிலேயே தடுத்து நிறுத்தினர்,'' என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில், சட்டசபை தேர்தல் ஏழு கட்டமாக அடுத்த மாதம் 10ல் துவங்கி, மார்ச் 7 வரை நடக்கிறது. இத்தேர்தலில், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய லோக்தள் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
முசாபர்நகரில் நானும் ராஷ்ட்ரீய லோக்தள் தலைவர் ஜெயந்த் சவுத்ரியும் பிரசாரம் செய்யவும், பத்திரிகையாளர்களை கூட்டாக சந்திக்கவும் திட்டமிட்டிருந்தோம்.
இதற்காக, ஹெலிகாப்டரில் முசாபர்நகருக்கு சென்றேன். ஆனால், டில்லியில் என் ஹெலிகாப்டர் தடுத்து நிறுத்தப்பட்டு, முசாபர்நகருக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதறகான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், பா.ஜ., தலைவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தோல்வி பயத்ததில், என் பிரசாரத்தை முடக்க, பா.ஜ., செய்யும் சதிதான் இது. உ.பி,யில் நாங்கள் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெறுவோம்.
இவ்வாறு அகிலேஷ் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE