'யாரும் அனாதையில்லை': சித்தராமையா தத்துவம்

Added : ஜன 28, 2022
Advertisement
பெங்களூரு : ''மக்களின் அன்பு இருக்கும் வரை, யாரால் யாரும் அனாதையாக மாட்டார்கள். நானும் அவ்வளவு தான், இப்ராகிமும் அவ்வளவு தான். மக்களின் அன்பே முக்கியம்,'' என, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:எம்.எல்.சி., இப்ராகிம், காங்கிரசை விட்டு செல்ல மாட்டார். ம.ஜ.த.,விலும் சேர மாட்டார். இதற்கு முன் அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி

பெங்களூரு : ''மக்களின் அன்பு இருக்கும் வரை, யாரால் யாரும் அனாதையாக மாட்டார்கள். நானும் அவ்வளவு தான், இப்ராகிமும் அவ்வளவு தான். மக்களின் அன்பே முக்கியம்,'' என, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.



பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:எம்.எல்.சி., இப்ராகிம், காங்கிரசை விட்டு செல்ல மாட்டார். ம.ஜ.த.,விலும் சேர மாட்டார். இதற்கு முன் அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கை நழுவ செய்ததே, தேவகவுடா தான். எனவே அவருடன் செல்ல மாட்டார் என தோன்றுகிறது.அவர் கோபத்தில் பேசியிருக்கக் கூடும். அவருடன் நான் பேசுகிறேன். அடுத்த தேர்தலில், காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்பது அவருக்கு தெரியும்.என்னை பாதாமியில் போட்டியிடும்படி கூறியோரில், அவரும் ஒருவர்.

அவர் எனக்கு நெருக்கமான நண்பர். அவர் என்னைப்பற்றி என்ன சொன்னாலும் வாழ்த்து கூறியதாக கருதுவேன்.மக்களின் அன்பு இருக்கும் வரை யாராலும், யாரும் அனாதையாக மாட்டார்கள். நானும் அவ்வளவு தான்; இப்ராகிமும் அவ்வளவு தான். மக்களின் அன்பே முக்கியம்.ஹிந்து வேறு, ஹிந்துத்வா வேறு. கடலோர மாவட்டம், யாருடைய பாதுகாப்பு கோட்டையும் இல்லை. 2013 தேர்தலில் தட்சிண கன்னடாவில், காங்கிரஸ் ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

பா.ஜ., வெற்றி பெற்றது ஒரே ஒரு தொகுதியில் தான்.குடியரசு தினத்தன்று, கொடியேற்றும் இடத்திலிருந்து, ராய்ச்சூர் மாவட்ட நீதிபதி, அம்பேத்கர் உருவப்படத்தை அகற்றியது பெருங்குற்றம். அவர் மீது கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ., அரசின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தாங்களே வகுத்த கொரோனா விதிமுறைகளை மீறுகின்றனர். அவர்களுக்கு விதிமுறைகள் பொருந்தாதா?இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X