ஹாசன் : ''காங்கிரஸ், பா.ஜ., என இரண்டு தேசிய கட்சிகளின் பஸ்கள் காலியாக இருப்பதால், 'ஏறுங்கள்...' என்கின்றனர். ம.ஜ.த., பஸ் நிரம்பியுள்ளது. வந்தோரை மட்டும் வரவேற்கிறோம்,'' என ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ரேவண்ணா தெரிவித்தார்.
ஹாசனில் அவர் நேற்று கூறியதாவது:காங்கிரஸ் பஸ் எங்கு கெட்டு நின்று விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். அதனால் பலரும் அந்த பஸ்சில் ஏறவில்லை. 2023ன் சட்டசபை தேர்தலில், ம.ஜ.த., சக்தியாக உருவெடுக்கும். கடவுள் மீது நம்பிக்கை வைத்து இந்த வார்த்தையை நான் கூறுகிறேன்.அரசின் அமைச்சர்கள் எந்த வேலையும் செய்யவில்லை. தற்போது மாவட்ட பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.வரும் 2023 ல் சட்டசபை தேர்தல் நடக்கும் என்பதால், அமைச்சர்கள் அவரவர் தொகுதிகளில் கவனம் செலுத்துவர்.
அப்போது மீண்டும் அதிகாரிகளின் தர்பார் ஆரம்பமாகும்.மக்களின் பிரச்னைகளில் யாரும் அக்கறை காண்பிக்க மாட்டார்கள். 60 ஆண்டுகள் ஆட்சி நடத்திய காங்கிரசுக்கு, மேகதாது திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, முன்னாள் முதல்வர் குமாரசாமி வர வேண்டியிருந்தது.காவிரி நீர்ப்பாசனப்பகுதி மக்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ், தற்போது பாதயாத்திரை நடத்தி நாடகமாடுகிறது.
கொரோனாவால் பலரும் வேலையை இழந்து அவதிப்படுகின்றனர். தினமும் 20க்கும் மேற்பட்டோர், எங்கள் வீட்டுக்கு வந்து ஏதாவது வேலை வாங்கித்தரும்படி மன்றாடுகின்றனர். பலர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த அரசுக்கு, ஏழைகள் மீது அக்கறையில்லை.பா.ஜ., காங்கிரஸ் என இரண்டு தேசிய கட்சிகளின் பஸ்கள் காலியாக இருப்பதால், 'ஏறுங்கள்...' என்கின்றனர். ம.ஜ.த., பஸ் நிரம்பியுள்ளது. வந்தோரை மட்டும் வரவேற்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement