என்.சி.சி.,யில் பெண்கள் அதிகளவில் சேர வேண்டும்: பிரதமர்

Added : ஜன 28, 2022 | |
Advertisement
புதுடில்லி:''என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படையில், பெண்கள் அதிகளவில் சேர வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் என்.சி.சி., முகாம் நடக்கிறது. இன்று நிறைவு பெறுகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, என்.சி.சி., படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்
 என்.சி.சி.,யில் பெண்கள் அதிகளவில் சேர வேண்டும்: பிரதமர்

புதுடில்லி:''என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படையில், பெண்கள் அதிகளவில் சேர வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் என்.சி.சி., முகாம் நடக்கிறது. இன்று நிறைவு பெறுகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, என்.சி.சி., படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின் பிரதமர் மோடி பேசியதாவது:தேசமே முதன்மை என்ற எண்ணம், அனைவரிடத்திலும் பரவ வேண்டும். நானும், என்.சி.சி.,யின் உறுப்பினர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

என்.சி.சி,,யை பலப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போது நடந்த அணிவகுப்பில் பெண்கள் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.இது, இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எடுத்துக் காட்டுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் என்.சி.சி., படையினர், எல்லை பாதுகாப்பு பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆயுதப் படைகளில் பெண்களுக்கு அதிக பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. என்.சி.சி.,யில் பெண்கள் அதிகளவில் இணைந்து, அதை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

நாட்டில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில்,என்.சி.சி.,யினர் ஈடுபட வேண்டும். போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர்களை, அதிலிருந்து மீட்க வேண்டும்.

தற்சார்பு இந்தியாவை உருவாக்க, உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில், இளைஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. உள்ளூர் தயாரிப்புகளின் தேவை அதிகரித்தால், உற்பத்தி பெருகி வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.தேசம் தான் முதன்மை என்ற உணர்வுடன் செயல்படும் இளைஞர்கள் இடம் பெற்றுள்ள நாட்டின் வளர்ச்சியை, யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு பிரதமர் பேசினார்.


'இந்திய இசையை பிரபலப்படுத்த வேண்டும்'



மறைந்த பாடகர் பண்டிட் ஜஸ்ராஜின் 92வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி. பண்டிட் ஜஸ்ராஜ் கலாசார அமைப்பை, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: பொருளாதாரத்தை சுற்றியே உலகமயம் என்ற வார்த்தை உள்ளது. அனைத்து துறைகளுக்கும் உலகமயம் பொருந்தும். மிகவும் சிறப்பு மிக்க இந்திய இசையை, சர்வதேச அளவில் பிரபலப்படுத்த வேண்டியது நம் கடமை.

இந்திய இசை, மனதுக்கு அமைதியை தருவதுடன், ஒருவரின் சிந்தனையையும் வளப்படுத்துகிறது. அது மனிதர்களை தெய்வீகத்துடன் இணைய வைக்கிறது. இந்திய இசையின் பெருமையை, பலனை உலக மக்கள் அறிய செய்ய வேண்டியது நம் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.


லஜபதி ராய்க்கு பிரதமர் அஞ்சலி

'பஞ்சாப் சிங்கம்' என அழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜபதி ராயின் 157வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி பிரதமர் மோடி கூறுகையில், ''சுதந்திரப் போராட்டத்தில் லாலா லஜபதிராயின் துணிச்சல், போராட்டம், அர்ப்பணிப்பு ஆகியவை, நாட்டு மக்களால் எப்போதும் நினைவுகூறப்படும்,'' என்றார்.


சீக்கியர் டர்பன் அணிந்த மோடி

டில்லியில் கடந்த, 26ம் தேதி நடந்த குடியரசு தின விழாவில், உத்தரகண்ட் மாநிலத்தின் பாரம்பர்ய மிக்க தொப்பி, மணிப்பூர் மாநிலத்தின் துண்டு ஆகியவற்றை அணிந்து, பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில், டில்லியில் நடந்த என்.சி.சி., நிகழ்ச்சியில், சீக்கிய வீரர்கள் அணியும் பச்சை நிற டர்பனும், சிவப்பு நிற இறகும் அணிந்து பங்கேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X