புதுகல்பாக்கத்தில் கடலரிப்பு தடுக்க முடிவு।

Added : ஜன 28, 2022 | |
Advertisement
மாமல்லபுரம் : புதுகல்பாக்கத்தில் கடலரிப்பை தவிர்க்க, 7.76 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பு அமைக்க, மீன்வளத்துறை ஒப்பந்தம் அறிவித்துள்ளது.மாமல்லபுரம் அடுத்த, புதுகல்பாக்கம் கடற்கரை பகுதியில் வசிப்பிட பகுதி அமைந்து, மீனவர் வசிக்கின்றனர். சென்னை பகுதியினரின் வீடுகளும், அருகில் உள்ளன. இப்பகுதியில் கடலரிப்பு பாதிப்பால், கடற்கரை அழிந்து வருகிறது.கடந்த இரு ஆண்டுகளாக அரிப்பு

மாமல்லபுரம் : புதுகல்பாக்கத்தில் கடலரிப்பை தவிர்க்க, 7.76 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பு அமைக்க, மீன்வளத்துறை ஒப்பந்தம் அறிவித்துள்ளது.

மாமல்லபுரம் அடுத்த, புதுகல்பாக்கம் கடற்கரை பகுதியில் வசிப்பிட பகுதி அமைந்து, மீனவர் வசிக்கின்றனர். சென்னை பகுதியினரின் வீடுகளும், அருகில் உள்ளன. இப்பகுதியில் கடலரிப்பு பாதிப்பால், கடற்கரை அழிந்து வருகிறது.கடந்த இரு ஆண்டுகளாக அரிப்பு அதிகரித்து, பங்களா வீடுகள் பகுதியில், சுற்றுச்சுவர் வரை, மணல் அரிக்கப்பட்டு, வீடுகள் அந்தரத்தில் தொங்கும் அபாயத்தில் உள்ளன.

சூலேரிக்காடு பகுதியில், கடலரிப்பை தடுக்க, கற்கள் குவிக்கப்பட்டதால், இப்பகுதியில் கடலரித்து ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் அச்சப்படுகின்றனர்.இங்கும் கடலரிப்பு தடுப்பு அமைக்க, அரசிடம் வலியுறுத்தினர்.இந்நிலையில், கடலரிப்பு தடுப்பு மற்றும் மீன் இறங்குதளம் என, 7.76 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க, மீன்வளத் துறை முடிவெடுத்து, தற்போது ஒப்பந்தம் அறிவித்துள்ளது.ஏலக்கூடம் அமைகிறதுகல்பாக்கம் - புதுப்பட்டினம், மாமல்லபுரம் அடுத்த, சூலேரிக்காடு பகுதிகளில், கடலரிப்பை தடுக்க, நேர்கல் தடுப்பு, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில், குறிப்பிட்ட நீள பரப்பிற்கு, கரையிலிருந்து கடற்கரை நோக்கி, நீள்வரிசையில், கருங்கற்கள் குவித்து இத்தடுப்பு அமைக்கப்படுகிறது.ஒவ்வொரு தடுப்பிற்கும் இடையே, குறிப்பிட்ட நீள இடைவெளி விட்டு, பல வரிசைகளில் தடுப்பாக அமையும். ஒவ்வொரு வரிசை தடுப்பிற்கும் இடையில், மணல் உந்தி தள்ளப்பட்டு, நிரந்தரமாக அடைந்து, அரிப்பு தடுக்கப்படுகிறது.புதுகல்பாக்கத்தில் இதேபோல் தடுப்புடன், மீன் இறக்கும் தளம், வலைபின்னல் மற்றும் ஏலக்கூடங்கள் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X