ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி மாற்றம்

Added : ஜன 28, 2022
Advertisement
சென்னை:உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் தேதி மாற்றப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும். இந்த ஆண்டு கவுன்சிலிங் ஆன்லைன் வழியில் நடக்கிறது. இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு, 58 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு பதவிகளின்

சென்னை:உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் தேதி மாற்றப்பட்டுள்ளது.


தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும். இந்த ஆண்டு கவுன்சிலிங் ஆன்லைன் வழியில் நடக்கிறது. இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு, 58 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு பதவிகளின் அடிப்படையில், இம்மாதம் 19ம் தேதி முதல், படிப்படியாக இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து வந்தது.
இந்நிலையில், நகர்ப்பறஉள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கான கால அட்டவணை மாற்றப்பட்டு உள்ளது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இணை இயக்குனர் நரேஷ், புதிய அட்டவணை அடங்கிய சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.இந்த அட்டவணையை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி, கவுன்சிலிங்கை புகார் இன்றி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X