128 மாணவ - மாணவியர் பள்ளியில் சேர்ப்பு

Added : ஜன 28, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஒன்றியத்தில், இருளர், நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பள்ளி இடைநின்ற மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது.காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குருவிமலை, துலங்கும்தண்டலம், கீழம்பி, ஆற்பாக்கம், காவாந்தண்டலம் உள்ளிட்ட பல பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில் கண்டறியப்பட்ட நரிக்குறவர், இருளர்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஒன்றியத்தில், இருளர், நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பள்ளி இடைநின்ற மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது

.காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குருவிமலை, துலங்கும்தண்டலம், கீழம்பி, ஆற்பாக்கம், காவாந்தண்டலம் உள்ளிட்ட பல பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில் கண்டறியப்பட்ட நரிக்குறவர், இருளர் இனத்தைச் சேர்ந்த ஏழு பள்ளி செல்லா குழந்தைகள், முசரவாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு அரசின் விலையில்லா பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு, 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.அதேபோல், காஞ்சிபுரம் ஒன்றியத்தில், முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, இடை நின்ற மாணவர்களை கண்டறிவது நடத்தப்பட்டது.இதில் கண்டறியப்பட்ட இடைநின்ற 121 மாணவ - மாணவியர், அருகில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X