கல்லூரிகள் திறந்தாலும் 'ஆன்-லைனில்' தேர்வு: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

Added : ஜன 28, 2022 | கருத்துகள் (1)
Advertisement
விழுப்புரம்:''தமிழகத்தில் கல்லுாரிகள் திறக்கப்பட்டாலும், தேர்வுகள் 'ஆன்லைன்' மூலமாகவே நடைபெறும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.விழுப்புரத்தில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் பிப்., 1ம் தேதி முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். டிசம்பரில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள், பிப்., 1ம் தேதி முதல் ஆன்லைனில்

விழுப்புரம்:''தமிழகத்தில் கல்லுாரிகள் திறக்கப்பட்டாலும், தேர்வுகள் 'ஆன்லைன்' மூலமாகவே நடைபெறும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.


விழுப்புரத்தில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் பிப்., 1ம் தேதி முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். டிசம்பரில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள், பிப்., 1ம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் என, அறிவித்து இருந்தோம்.
கல்லுாரிகள் திறக்கப்படுவதால் இதில் பாதிப்பு ஏற்படுமோ என்ற எண்ணம் சிலருக்கு உதித்துள்ளது. செமஸ்டர் தேர்வு ஏற்கனவே அறிவித்தது போல், ஆன்லைனில் நடைபெறும். செய்முறை தேர்வுகள் நேரடியாக நடைபெற உள்ளது. இதில், மாணவர்கள் எந்த குழப்பமும் அடைய வேண்டாம்.தேர்வுகள் இல்லாத நாளில் கல்லுாரிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெறும்.
குறிப்பாக, பொறியியல் கல்லுாரி முதலாம் ஆண்டு துவங்கப்பட்டு நடைபெறும்.தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டும் தான் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இருமொழி கொள்கையை பின்பற்றுவதில்,தமிழக அரசின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது. மாணவர்கள் மூன்றாவது மொழியை தேர்வு செய்து விருப்ப பாடமாக படிக்கலாம்.பள்ளி கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கல்லுாரி கட்டடங்களும் ஆய்வு செய்யப்படும். தேர்வுகள் முறையாக நடைபெற்று முடிவுகள் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
U.ANNADURAI - Paramakudi,இந்தியா
29-ஜன-202212:31:56 IST Report Abuse
U.ANNADURAI தமிழ் நாட்டில் வரும் பிருகாரி முதல் நாள் முதல் காலுறைகள் பலிகள் வழக்கம் போன்று மாணவர்களுக்கு நேரடியாக நடக்கும் என்று தமிழ் நாடு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர்கள் சொல்லியுள்ளனர்.மேலும்,கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக பருவ தேர்வுகள் இன்டர்நெட் -ஒளியே மூலம் நடக்கும் என்று உயர் கல்வி அமைச்சர் திரு.பொன்முடி சொல்லி உள்ளார்.வகுப்புகள் நடக்கும்போது பிறகு என் இன்டர்நெட் மூலம் தேர்வுகள் நடத்தவேண்டும்?இந்த தேர்வுகள் ஒன்லைன் மூலன் நடப்பது அல்ல.ஒன்லைன் மூலம் பருவத்தேர்வுக்கு உரிய வினாத்தாளை மாணவர்களின் ஈமெயில் மிகவர்க்கு அல்லது சம்பத்தப்பட்ட தேர்வு வெப்சைட் கு கல்லூரிகக் அனைத்தும்.மாணவர்கள் உரிய விடைகளை முண்டு மணி நேரம் வழக்கமான விரிவான விடை எழுத வேண்டும் அதிக பட்சம் முப்பது பக்கம் அவர்கள் பேணா மூலம் தனியே தாளில் எழுதவேண்டும்.பிறகு அவர்கள் எழுதிய முப்பது பக்க விடை தலைசுக்கான் செய்து பகலைக்கழகம் அனுப்ப வேண்டும்.இதை அவர் கல் வீட்டில் இருந்தோ அல்லது தனியார் இன்டர்நெட் சென்டரில் இருந்தோ அல்லது அவர்களின் கலூரில் இருந்தோ அனுப்பலாம்.தனியார் இன்டர்நெட் சென்டர் மூலம் முப்பது பக்கம் ஸ்கேன் செய்து அனுப்ப முஃமினூறு ரூபாய் செலவு ஆகும்.மூன்று மநீ நேரம் அங்கு இன்டர்நெட் ப்ரௌசிங் செய்ய நூத்தி யிருப்பது ரூபாய் செலவு ஆகும்.அகா ஒரு தேர்வு இந்த முறைகள் எழுதி அனுப்ப குறைந்தது ஐந்து நுறு ரூபாய் செலவு ஆகும்.இவ்வாறு ஐந்து தேர்வுகள் எழுத இரண்டு ஆயிரத்தி ஐந்து நுறு ரூபாய் செலவு ஆகும்.இது போக பஸ் கட்டணம்,மற்ற கட்டணம் உண்டு .இத தேர்வுகளில்,மாணவர்கள்,புத்தகம்,ஏர்கனவே எழுதியுள்ள நோட்டுகள் அல்லது மற்றவர்களின் உதவுடன் கோப்பி[பார்த்து எழுதுதல்]] செய்ய முடியும்,.பல மாணவர்கள் சேர்ந்தும் பார்த்து எழுத முடியும்.இப்படித்தான் ஏற்க்கனவே இரண்டு ஆண்டுகால்கலுரி தேர்வுகள் யாவும் கோப்பி அடிப்பது எள்ளுரும் அதிக மார்க் பெற்றனர்.காரோண ஊரடங்கு கரணம் சொல்லி இப்படி அரசே பல்கலைக்கழக மானிய குழுவே கோப்பி அடிப்பது எழுதும்படி மாணவர்களு உத்தரவு போடுவது வேடிக்கை.சில சிபிஸ்க் மேல்நிலை பள்ளிகளில் பருவத்தேர்வுகள் இப்படி ஏற்க்கனவே வினாத்தாளை தேர்வுக்கு முன்பா மாணவர்களுக்கு கொடுத்து பிறகு அந்த பரவ தேர்வுகள் எழுதிய செய்தி சென்ற வரம் செய்தித்தாளில் பிவெளியானது.பள்ளி கல்லுரிகளில் தேர்வுகள் இப்படி நடந்தால்,பின் பு ஆல் இந்தியா நுழைவுத் தேர்வுகள் எப்படி நடக்கும்?அரசு அதிகாரிகள்,ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் நீர்மையாக இருந்தால் டான் நல்ல மாணவர்கள் கிடைப்பார்.அன்றி வரும் மாணவர்கள் பித்த ஆட்டம் செய்வாராக இருந்தால் வரும் காலம் அரசும் மக்களும் ஏமாற்றும் நபர்களாகயும்,முறை கேவ்ற்றில் திளைத்தவர்ககையும் தந் வருவார்.நீதியும்,நிர்வாகமும்,மருத்துவமும் மக்களை தினமும் வாட்டி வதைசெயும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X