'மாஜி' முதல்வர் எடியூரப்பா பேத்தி பெங்களூரில் துாக்கிட்டு தற்கொலை

Added : ஜன 28, 2022 | கருத்துகள் (3)
Advertisement
பெங்களூரு:கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி, பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கர்நாடகா முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதி. இவரது மகள் சவுந்தர்யா, 30, பெங்களூரின் வசந்த நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தார். இவர் எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் டாக்டராக
 'மாஜி' முதல்வர் எடியூரப்பா பேத்தி பெங்களூரில் துாக்கிட்டு தற்கொலை

பெங்களூரு:கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி, பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடகா முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதி. இவரது மகள் சவுந்தர்யா, 30, பெங்களூரின் வசந்த நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தார். இவர் எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றினார்.இவருக்கும், டாக்டர் நீரஜ் என்பவருக்கும் 2018ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒன்பது மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. சவுந்தர்யா கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.


ஜன்னல் வழியே


இந்நிலையில் நேற்று காலை கணவர் பணிக்கு சென்றதும், சவுந்தர்யா தன் அறைக்கு சென்று கதவைப் பூட்டி கொண்டார். 10:00 மணியளவில் உணவு சாப்பிட வரும்படி வீட்டு வேலைக்கார பெண் கதவை தட்டியுள்ளார். பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அவர் நீரஜுக்கு தகவல் கொடுத்தார். அவர் 10:30 மணிக்கு வீட்டுக்கு வந்து அறைக்கதவை தட்டினார். அப்போதும் திறக்க வில்லை.பக்கத்து வீட்டு பால்கனியில் இருந்து ஜன்னல் வழியே பார்த்த போது சவுந்தர்யா மின்விசிறியில் துாக்கில் தொங்குவது தெரிய வந்தது.

உடனே கதவை உடைத்து உள்ளே சென்றனர். துாக்கில் தொங்கிய சவுந்தர்யாவை இறக்கி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தி, டாக்டர்கள் சவுந்தர்யா உயிரை காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லை.


பரிசோதனை

அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.பிரேத பரிசோதனைக்கு பின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, எடியூரப்பாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார். பேத்தியின் நெற்றியை தடவி கொடுத்து எடியூரப்பா கண்ணீர் விட்டு கதறி அழுதார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
29-ஜன-202212:37:37 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy பணம் பதவி ஒருபோதும் பயனில்லை. ஒவ்வொருவரும் நல்ல மனிதனாக வாழ வேண்டும். தற்கொலைகளை தடுக்க வேண்டும்
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
29-ஜன-202202:39:45 IST Report Abuse
John Miller அநியாயமாக சேர்த்த சொத்து இப்போது ஏன் கை கொடுக்கவில்லை?
Rate this:
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
30-ஜன-202212:51:46 IST Report Abuse
Enrum anbudanஆம் ஒவ்வொரு அரசியல் தொழில் செய்து கொள்ளை அடிப்பவனிடமும் இந்த கேள்வி எழ வேண்டும். அப்பொழுதுதான் நாடு நல்ல நிலைமைக்கு வரும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X