சென்னை:முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான போட்டி தேர்வு வரும் 12ம் தேதி துவங்கும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை - -1 மற்றும் கணினி பயிற்றுனர்கள் நிலை - -1 ஆகிய பதவிகளில், காலி பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு 12ம் தேதி துவங்கி, 20ம் தேதி முடிவடையும். முதற்கட்டமாக, 15ம் தேதி வரையிலான தேர்வுகளின் விபரங்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள், 12ம் தேதி காலை, மாலை நடத்தப்படும். வணிகவியல், மனை அறிவியல், இந்திய கலாசாரம், இயற்பியல் தேர்வுகள், பிப்., 13; புவியியல், அரசியல் அறிவியல், வரலாறு, வேதியியல் தேர்வுகள், பிப்., 14ல் நடத்தப்படும். பொருளியல், தாவரவியல், உயிர் வேதியியல், உயிரியல் மற்றும் உடற்கல்வியியல் பாடங்களுக்கு, பிப்., 15ல் தேர்வுகள் நடத்தப்படும்.
கணினி வழியில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஆங்கிலம், கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்குரிய தேர்வு தேதி அட்டவணை அடுத்த வாரம் வெளியாகும். இந்த அட்டவணை மாறுதலுக்கு உட்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement