சென்னை:ஈரோடு வனக் கோட்டத்தை மையமாக வைத்து, புதிதாக புலிகள் காப்பகத்தை ஏற்படுத்துவதற்கான பணிகளை, வனத்துறை துவக்கி உள்ளது.
தமிழகத்தில் முதுமலை, களக்காடு -- முண்டந்துறை, ஆனைமலை, சத்தியமங்கலம், ஸ்ரீவில்லி புத்துார் மேகமலை என, ஐந்து புலிகள் காப்பகங்கள் உள்ளன. ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம், கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.ஆறாவது புலிகள் காப்பகம் ஈரோட்டில் அமைய உள்ளது.
ஏற்கனவே, ஈரோடு மாவட்டத்தில், சத்தியமங்கலம், ஆசனுார் வனக்கோட்டங்களை மையமாக வைத்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது. இது, குறுகிய காலத்தில் சர்வதேச அளவில் பிரபலமாகி விட்டது.தற்போது, ஈரோடு வனக்கோட்டத்தை மையமாக வைத்து, புதிய புலிகள் காப்பகம் அமைய உள்ளது. இதற்கான பணிகளை வனத்துறை துவக்கி உள்ளது. இது தொடர்பான அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement