ரேஷன் கடை நாளை உண்டு

Added : ஜன 28, 2022
Advertisement
சென்னை:இம்மாதத்திற்கான அத்தியாவசிய உணவு பொருட்களை பலர் வாங்காததால், நாளை ரேஷன் கடைகளுக்கு வேலை நாளாக அறிவித்து, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டு உள்ளது.இம்மாதம் 4ம் தேதியில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதால், 17ம் தேதி முதல் தான் இம்மாதத்திற்கான வழக்கமான ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் பணி துவங்கியது. இதனால், பலர் வாங்காமல் உள்ளனர்.இதையடுத்து, ரேஷன்

சென்னை:இம்மாதத்திற்கான அத்தியாவசிய உணவு பொருட்களை பலர் வாங்காததால், நாளை ரேஷன் கடைகளுக்கு வேலை நாளாக அறிவித்து, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டு உள்ளது.


இம்மாதம் 4ம் தேதியில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதால், 17ம் தேதி முதல் தான் இம்மாதத்திற்கான வழக்கமான ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் பணி துவங்கியது. இதனால், பலர் வாங்காமல் உள்ளனர்.இதையடுத்து, ரேஷன் கடைகளுக்கு நாளை ஞாயிற்றுக் கிழமை விடுமுறையாக இருந்தாலும், வேலை நாளாக அறிவித்து, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.
அதற்கு மாற்றாக, பிப்., 26ல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பல ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க, கார்டுதாரர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த, இம்மாதம் வாங்காத பொருட்களை, அடுத்த மாதம் சேர்த்து வாங்க அனுமதிக்குமாறு, பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X