'குரூப் - 2, குரூப் - 4' தேர்வுக்கு புதிய பாடத் திட்டம் வெளியீடு

Added : ஜன 28, 2022
Advertisement
சென்னை:'குரூப் - 2, குரூப் - 4' உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டம், டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுக்கான, 'அப்ஜெக்டிவ்' என்ற கொள்குறி வகை தேர்வில், குரூப் -- 3, குரூப் -- 4, குரூப் - 7 பி, சிறை அலுவலர் மற்றும்

சென்னை:'குரூப் - 2, குரூப் - 4' உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டம், டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுக்கான, 'அப்ஜெக்டிவ்' என்ற கொள்குறி வகை தேர்வில், குரூப் -- 3, குரூப் -- 4, குரூப் - 7 பி, சிறை அலுவலர் மற்றும் சிறை உதவி அலுவலர் பதவிக்கான குரூப் - 8 ஆகிய தேர்வுகளுக்கு, மேம்படுத்தப்பட்ட பாட திட்டம், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
மேலும், குடிமை பணிகளுக்கான 'குரூப் - 2, 2 ஏ' முதல்நிலை தேர்வுக்கான, மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டமும் இணைய தளத்தில் பதிவேற்றப் பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த பாடத் திட்டத்தை பார்த்து கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X