சேலம் மாநகராட்சியில் கவுன்சிலர் 'சீட்' பெற, அ.தி.மு.க., - தி.மு.க.,வினரிடம் பேரம் படிந்துள்ளது. 30 லட்சம் ரூபாய் கொடுப்பவருக்கு சீட் உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உளளன.
சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. அ.தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'அ.தி.மு.க., நடத்திய நேர்காணலில், வேட்பாளர் சீட் பெற 30 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின், அத்தொகையை பொறுப்பாளரிடம் கொடுத்து விட வேண்டும்.
''ஒவ்வொரு வார்டுக்கும் வழங்கிய தலா, 20 லட்சம் ரூபாயுடன் சேர்த்து, ஒரு வார்டுக்கு, 50 லட்சம் ரூபாய் வரை, அ.தி.மு.க., செலவு செய்யும்' என்றார்.
தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறுகையில், 'தி.மு.க.,வில் வேட்பாளர் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. நேர்காணலின் போதே வார்டுக்கு, 30 லட்சம் ரூபாயை கட்டிய பின்னர் தான், பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறும் என கூறப்பட்டு, அதன் படி வசூலிக்கப்பட்டுள்ளது.
'இத்தொகையுடன் தலைமையால், ஒவ்வொரு வார்டுக்கும் வழங்கப்படும், 30 லட்சம் ரூபாய் சேர்த்து, மொத்தம் 60 லட்சம் ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE