டேராடூன்:''உத்தரகண்ட் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.,வுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்தார்.
உத்தரகண்டில் முதல்வர்புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மொத்தம் 70 தொகுதிகள் அடங்கிய உத்தரகண்ட் சட்டசபைக்கு பிப்., 14ல் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுதும் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா ருத்ரபிரயாக் நகரில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது: கடந்த 2014 மற்றும் 2019ல் நடந்த லோக்சபா தேர்தல்களில் மாநிலத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் பா.ஜ.,வை வெற்றிவாகை சூட வைத்தீர்கள். அதேபோல் கடந்த சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.,வை ஆட்சி பீடத்தில் அமர வைத்தீர்கள். நல்லாட்சிதொடர மீண்டும் பா.ஜ.,வுக்கே வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரகண்டில் பா.ஜ., அரசு செய்த வளர்ச்சிப் பணிகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் அமித் ஷா வினியோகித்தார். மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சேவைகளையும் நினைவு படுத்தி அமித் ஷா பேசினார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement