இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

Added : ஜன 28, 2022
Advertisement
சென்னை:'த-மிழகத்தில் கிழக்கு திசையில் இருந்து வீசும் பருவக்காற்று தொடர்வதால், இன்றும், நாளையும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கொட்டி தீர்த்த வடகிழக்கு பருவமழை, கடந்த 22ம் தேதி விலகியதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில், 'சில நாட்களுக்கு பின், மீண்டும் கிழக்கு

சென்னை:'த-மிழகத்தில் கிழக்கு திசையில் இருந்து வீசும் பருவக்காற்று தொடர்வதால், இன்றும், நாளையும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கொட்டி தீர்த்த வடகிழக்கு பருவமழை, கடந்த 22ம் தேதி விலகியதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில், 'சில நாட்களுக்கு பின், மீண்டும் கிழக்கு திசையில் இருந்து, பருவகாற்று தொடரும் நிலையில், சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இன்றும், நாளையும், மழை நீடிக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். அதிகபட்சம், 31 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்.தென் கடலோர மாவட்டங்களின் சில இடங்களில் நாளை மிதமான மழை பெய்யும். வரும், 31, 1ம் தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக குன்னுாரில், 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கேத்தி, அளக்கரை எஸ்டேட், 3; கோத்தகிரி, 2; மரக்காணம், பாண்டவையாறு, பாலக்கோடு, 1 செ.மீ, மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X