சென்னை:ஓட்டேரியில், மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவரை, சுத்தியலால் அடித்து கொலை செய்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் பிரதீப், 43. இவரது மனைவி பிரீதா, 41. இவர்களுக்கு, 20 வயதில் மகள் உள்ளார்; பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது 11 வயது மகன், ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர்களுக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. அவற்றில் இருந்து பெறப்படும் வாடகை பணத்தில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
மது பழக்கத்திற்கு அடிமையான பிரதீப், நேற்று முன்தினம்இரவு, மது போதையில் வீட்டிற்குச் சென்றார். அப்போது, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.பின், மனைவி, மகன் உறங்க சென்றனர். இரவு 11:30 மணிக்கு போதையில் இருந்த பிரதீப், தன் 20 வயது மகளிடம் தவறாக நடக்க முயன்றார். மகள் அலறியதையடுத்து, பிரீதா, கணவரை தடுத்தார். அதையும் மீறி, பிரதீப் தொடர்ந்து பலாத்காரம் செய்ய முயன்றதால், பிரீதா, வீட்டில் இருந்த சுத்தியலால், கணவரின் தலையில் அடித்துள்ளார்.
இதில், பிரதீப் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், பிரீதாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement