மேட்டூர் அணையில் நீர் திறப்பு 231 நாட்களுக்கு பின் நிறுத்தம்| Dinamalar

மேட்டூர் அணையில் நீர் திறப்பு 231 நாட்களுக்கு பின் நிறுத்தம்

Added : ஜன 29, 2022 | |
மேட்டூர்:மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட நீர், 231 நாட்களுக்கு பின் நிறுத்தப்பட்டது.சேலம் மாவட்டம், மேட்டூர் அணை உயரம் 120 அடி. 93.47 டி.எம்.சி., நீர் தேக்க முடியும். கடந்த ஆண்டு ஜூன் 12ல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 12 டெல்டா மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா நெல்

மேட்டூர்:மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட நீர், 231 நாட்களுக்கு பின் நிறுத்தப்பட்டது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை உயரம் 120 அடி. 93.47 டி.எம்.சி., நீர் தேக்க முடியும். கடந்த ஆண்டு ஜூன் 12ல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 12 டெல்டா மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா நெல் சாகுபடி நடந்தது.
மேட்டூர் அணை நீர் இருப்பு, பருவமழை கைகொடுத்ததால், டெல்டா மாவட்டங்களில் வெற்றிகரமாக சாகுபடி நிறைவடைந்தது.இதனால், 231 நாட்கள் நீர் திறந்த நிலையில், நேற்று மாலை 6:00 மணிக்கு டெல்டா பாசன நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. நேற்று அணையின் நீர்மட்டம் 108.54 அடியாகவும், நீர் இருப்பு 76.35 டி.எம்.சி.,யாகவும் இருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X