சென்னை:ஜி.எஸ்.டி., ஏய்ப்பு தொடர்பாக, சென்னை தி.நகரில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடைகளில், அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவில் உள்ள, சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் மற்றும் நகை கடைகளில், சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் நகைக்கடை உட்பட, ஐந்து கடைகளில், சென்னை தெற்கு ஜி.எஸ்.டி., அதிகாரிகள்திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் ஈடுபட்ட, 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள், கடைகளின் கணக்கு விபரங்கள், கொள்முதல், விற்பனை விபரங்களை, ஜி.எஸ்.டி.,யில் தாக்கல் செய்த கணக்குகளுடன் ஒப்பிட்டு ஆய்வு நடத்தினர்.இதில், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. முழுமையான விபரங்கள், சோதனை முடிந்ததும் தெரிய வரும் அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement