புதுடில்லி : 'முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான மறு ஆய்வு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்' என, மத்திய நீர்வள ஆணையம் மற்றும் அணை கண்
காணிப்பு குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளன.
பராமரிப்பு பணி
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில், அணை நிலவர அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் மற்றும் அணை கண்காணிப்பு குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன.
அதன் விபரம்:முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த, தமிழக அரசுக்கு நீர்வள ஆணையம் அனுமதி அளித்தது. 'இதற்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்' என,
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த
![]()
|
இதன் அடிப்படையில் அணையை பலப்படுத்த குறிப்பிட்ட கால அளவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.மேலும் அணையை பலப்படுத்த முல்லை பெரியாறின் துணை அணையான, பேபி அணையின் பராமரிப்பு பணியையும் மேற்கொள்ள வேண்டும்.
'ஆனால் இதற்கு கேரள அரசு உரிய ஒத்துழைப்பு தரவில்லை' என, தமிழக அரசு கூறியது. அணை பகுதியில் மழை அளவை கணக்கிட, 'டெலிமெட்ரி' என்ற கருவியை கேரள அரசு பொருத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இந்த விவகாரங்கள் குறித்து அணையின் பாதுகாப்பு உயர் நிலைக்குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இதன்படி மழையின் அளவு மற்றும் நீர்வரத்தை கணக்கிட, 'டெலிமெட்ரி' கருவியை பொருத்தி மணிக்கு ஒருமுறை அளவிடும் பணியை செயல்படுத்துமாறு, கேரள அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை, கடந்த 2010 - 12 வரையில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
கண்காணிப்பு குழு
மேலோட்டமான ஆய்விலும் அணையின் கட்டுமானம், பலம், தரம் ஆகியவை திருப்திகரமாக உள்ளதாக கண்காணிப்பு குழு தெரிவித்தது. இருப்பினும் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தற்போது எவ்வாறு உள்ளது என்பது குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. இதை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE