சென்னை:சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வீட்டுத் தனிமையில் உள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சங்கர் ஜிவால், 57. மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், டி.ஜி.பி., அந்தஸ்தில், சென்னை போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். தினமும் காலை 7:30 மணியில் இருந்தே பணிகளை கவனிக்க துவங்கி விடுவார். காலை 9:00 மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருப்பார்.
கோப்புகள் மேஜையில் தேங்குவதை தவிர்த்து விடுவார்; மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர்.இரு தினங்களுக்கு முன், சென்னை மெரினா கடற்கரையில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்றார். அதன்பின், இவருக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது. காய்ச்சல் அதிகமானதால், நேற்று காலை 11:30 மணிக்கு, கொரோனா தொற்று பரிசோதனை செய்தார். மாலையில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து வீட்டுத் தனிமையில் உள்ளார்; மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement