துாத்துக்குடி:துாத்துக்குடி அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தின் மீது காரை ஏற்றி, ரயில்வே அதிகாரியை கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி, கே.டி.சி., நகரைச் சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன், 56. துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பாளராக பணி செய்தார். கடந்த 16ம் தேதி இரவு, திருநெல்வேலி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தபோது, செய்துங்கநல்லுார் அருகே கார் மோதி பலியானார்.
செய்துங்கநல்லுார் போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்தனர். துாத்துக்குடி எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவில், தனிப்படை போலீசார், இது குறித்து விசாரணை நடத்திய போது, ஐந்து பேர் கும்பல் அவரை காரை மோதி கொலை செய்தது தெரியவந்தது.
எஸ்.பி., ஜெயக்குமார் கூறியதாவது:துாத்துக்குடி மாவட்டம், நாசரேத், செந்தாமரைக்கண்ணனின் சொந்த ஊர். அதே ஊரைச் சேர்ந்த சாம்ராட் என்பவருக்கும், இவருக்கும் நிலத்தகராறு இருந்தது.சாம்ராட் கடந்த 4ல் நண்பர்கள் ஐந்து பேருடன் கோவா சுற்றுலா சென்ற போது, ரயில் விபத்தில் இறந்தார்.
அவரது இறப்பு குறித்து சமூக வலைதளங்களில், 'இறைவனுடைய தண்டனை' என, செந்தாமரைகண்ணன் பதிவிட்டார். இதனால் சாம்ராட் நண்பர்கள் ஆத்திரம்அடைந்தனர். வல்லநாடு மகேஷ், 33, கலியாவூர் சுடலைமணி, 29, மூளிக்குளம் ஜெகன், பக்கப்பட்டி கந்தகுமார்,மார்த்தாண்டம் ஆகியோர் சேர்ந்து'போர்டு' காரைை வைத்து, செந்தாமரைக் கண்ணன் இருசக்கர வாகனத்தில் மோதி அவரை கொலை செய்துள்ளனர்.அவர்களில் மகேஷ், சுடலைமணி கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement