சென்னை:'இன்ஜினியரிங் மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியவர்கள், தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம்' என, அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது.
கல்லுாரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள், 'ஆன்லைனில்' நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள், பிப்., 1 முதல் துவங்குகின்றன. கலை, அறிவியல்கல்லுாரிகளுக்கு பிப்., 20 வரையிலும், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு மார்ச் 5 வரையிலும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் விடுபட்ட மாணவர்களும், பதிவு செய்யலாம் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. அண்ணா பல்கலையின், coe1.annauniv.edu என்ற இணையதளத்தில், இன்று மாலை, 7:00 மணிக்குள் பதிவு செய்யலாம் என, பல்கலையின் தேர்வு கட்டுப்பாடு அலுவலகம் அறிவித்துள்ளது. சந்தேகங்களுக்கு, 044 - 2235 7272 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement