ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் அருகே நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து தாய், மகனை இரும்பு கம்பியால் தாக்கி 4சவரன் செயினை பறித்துச் சென்ற இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த குணமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரேமா, 54; இவரது கணவர் விருத்தகிரி ஆறு மாதங்களுக்கு முன் இறந்தார். இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கொளஞ்சிமணி சென்னையில் பணிபுரிகிறார். இரண்டாவது மகன் சக்திவேல், 24; பிரேமாவுடன் உள்ளார்.
பிரேமா வீட்டின் முன் பெட்டிக்கடை வைத்துள்ளார். இருவரும் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி துாங்கினர்.இரவு 1:00 மணிக்கு மர்ம நபர்கள் இருவர் கடையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். சத்தம் கேட்டு வந்த பிரேமாவிடம், 4 சவரன் செயினை பறித்தனர்.அவர் செயினை விடாமல் பிடித்ததால், இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கினர். அப்போது ஓடிவந்த சக்திவேல் தலையிலும் கம்பியால் அந்த நபர்கள் பலமாக தாக்கினர். பின், பிரேமாவின் 4 சவரன் செயினை பறித்து தப்பினர். மர்ம நபர்கள் குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement