சென்னை:நான்கு மாதங்களாக நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட நபருக்கு, 250 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் குறை தீர்ப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்த சேதுபதி என்பவர், தன் காலி வீட்டுமனை மேல் செல்லும் மின் வழித்தடத்தை, வேறு இடத்திற்கு மாற்றித் தருமாறு, ஊத்தங்கரை பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்துள்ளார்.
அந்த விண்ணப்பம் மீது, நான்கு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர், கிருஷ்ணகிரி மாவட்ட மின் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்துள்ளார்.அங்கு அளித்த தீர்ப்பை ஏற்காததால் மனுதாரர், தமிழக மின்சார ஒழுங்முறை ஆணையத்தில் உள்ள மின் குறை தீர்ப்பாளரிடம் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதை விசாரித்த குறை தீர்ப்பாளர் தேவராஜன் அளித்த உத்தரவு:மனுதாரர் தெரிவித்துள்ள மின் வழித்தடம் அமைத்து, பல ஆண்டுகளாகின்றன. வழித்தடம் அமைக்கும் போதே எதிர்ப்பு தெரிவித்தால், வேறு இடத்திற்கு மாற்றலாம். ஏற்கனவே அமைத்த வழித்தடத்தை மாற்ற, மின் வழங்கல் விதிப்படி அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும்.
எனவே, மேல்முறையீட்டாளரின் கோரிக்கை ஏற்புடையதல்ல. மின் வாரியம், விண்ணப்பம் பெற்று நான்கு மாதங்களாக பதில் அளிக்காததுடன், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு, 250 ரூபாய் இழப்பீடு வழங்க, மின் வாரியத்திற்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement