ஓட்டு எண்ணும் மையம்: கலெக்டர், எஸ்.பி., ஆய்வு

Added : ஜன 29, 2022 | |
Advertisement
சின்னசேலம் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் மற்றும் எஸ்.பி., நேற்று செய்தனர்.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து தேர்தல் பணியில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.சின்னசேலம் அடுத்த மேலுார் தனியார்
 ஓட்டு எண்ணும் மையம்: கலெக்டர், எஸ்.பி., ஆய்வு

சின்னசேலம் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் மற்றும் எஸ்.பி., நேற்று செய்தனர்.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது.

அதனைத் தொடர்ந்து தேர்தல் பணியில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.சின்னசேலம் அடுத்த மேலுார் தனியார் பொறியியல் கல்லுாரியில் சின்னசேலம் மற்றும் வடக்கனந்தல் பேரூராட்சிகளில் பதிவாகும் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து அந்த ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.பி., செல்வகுமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.அப்போது, சின்னசேலம் மற்றும் வடக்கனந்தல் பேரூராட்சிகளின் ஓட்டுப் பொட்டிகளை வைப்பது, அங்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.நகராட்சி கமிஷனர் குமரன், டி.எஸ்.பி., ராஜலட்சுமி, சின்னசேலம் செயல் அலுவலர் உஷா உடனிருந்தனர்.கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் சங்கராபுரம் பேரூராட்சிக்கு, கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பாரதி மகளிர் கல்லுாரியிலும், சின்னசேலம் மற்றும் வடக்கனந்தல் பேரூராட்சிக்கு கள்ளக்குறிச்சி டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லுாரிலும் ஓட்டுகள் எண்ணப்படுகிறது. இந்த ஓட்டு எண்ணும் அறைகள், ஓட்டு பெட்டிகள் வைக்கும் அறைகள் மற்றும் காவல் துறையின் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X