வதந்தி பரப்புவதாக புகார் பா.ஜ., பிரமுகர் மீது வழக்கு

Added : ஜன 29, 2022
Advertisement
சென்னை:சமூக வலைதளத்தில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பதிவிட்டு, மதக் கலவரத்தை துாண்டுவதாக, பா.ஜ., இளைஞர்அணி தலைவர்வினோஜ் பி செல்வம் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம், மக்களிடம் வதந்தி பரப்பும் வகையில், சமூக

சென்னை:சமூக வலைதளத்தில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பதிவிட்டு, மதக் கலவரத்தை துாண்டுவதாக, பா.ஜ., இளைஞர்அணி தலைவர்வினோஜ் பி செல்வம் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம், மக்களிடம் வதந்தி பரப்பும் வகையில், சமூக வலைதளத்தில் பொய்யான தகவல்களை பதிவிட்டு வருகிறார். இவரதுபதிவு, மதக் கலவரத்தை துாண்டும் வகையில் உள்ளது.
மதத்தின் அடிப்படையில் மக்களிடம் வெறுப்பையும், பகையையும் உருவாக்கி, பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, வினோஜ் பி செல்வம் மீது, மதக் கலவரத்தை துாண்டுதல் உட்பட மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு பதிந்தனர்.சென்னையைச் சேர்ந்தவர் வினோஜ் பி செல்வம், 35; சட்டசபை தேர்தலில் துறைமுகம் தொகுதியில், தற்போதைய அமைச்சர் சேகர்பாபுவை எதிர்த்து போட்டியிட்டவர்.


கமிஷனர் எச்சரிக்கை

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது:சமூக வலைதளத்தில் மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்த்து, பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் கருத்து பதிவிடுவோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளை திரித்து வெளியிடுவோர் மீதும் நடவடிக்கை பாயும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X