தி.மு.க., - எம்.எல்.ஏ., கட்சி பதவி பறிப்பு ஏன்?

Added : ஜன 29, 2022
Advertisement
சென்னை:மாநகராட்சி இளநிலை பொறியாளரை தாக்கிய, எம்.எல்.ஏ.,வின் கட்சி பதவி பறிக்கப்பட்ட சம்பவம், தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, திருவொற்றியூர் எம்.எல்.ஏ.,வாக, சங்கர் உள்ளார். அவர், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால், திருவொற்றியூர் தி.மு.க., மேற்கு பகுதி செயலர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக, நேற்று காலை கட்சி தலைமை அறிவித்தது.உள்ளாட்சி தேர்தல்

சென்னை:மாநகராட்சி இளநிலை பொறியாளரை தாக்கிய, எம்.எல்.ஏ.,வின் கட்சி பதவி பறிக்கப்பட்ட சம்பவம், தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை, திருவொற்றியூர் எம்.எல்.ஏ.,வாக, சங்கர் உள்ளார். அவர், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால், திருவொற்றியூர் தி.மு.க., மேற்கு பகுதி செயலர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக, நேற்று காலை கட்சி தலைமை அறிவித்தது.
உள்ளாட்சி தேர்தல் நெருங்கியிருக்கும் நிலையில், கவுன்சிலர் வேட்பாளர் தேர்வு உட்பட பல விவகாரங்களில், மாவட்ட செயலர்உட்பட சக கட்சி பிரமுகர்களுடன், சங்கர் மோதல் போக்கை கடைப்பிடித்தாகவும், இது குறித்து தலைமைக்கு புகார் போனதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, திருவொற்றியூர், 10வது வார்டு, நடராஜன் தோட்டம் பகுதியில், தார் சாலை போடும் பணி நடந்தது. அப்போது, எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு வந்துள்ளனர்.தார் சாலை தரம் குறித்து, கேள்வி எழுப்பியபோது, மாநகராட்சி அதிகாரிகள் - எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்கள், இளநிலை பொறியாளர், ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.அந்த அதிகாரிகளும், எம்.எல்.ஏ., தரப்பினரும்மறுநாளே சமாதானமாகி விட்டதால், போலீசில் புகார் கொடுக்கப்படவில்லை. அதனால், அவர் கட்சி பதவியை மட்டும், தி.மு.க., தலைமை பறித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X