சென்னை:இ - சேவை மையங்களில், புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் அடையாள அட்டை பெற, தேர்தல் தாசில்தார் கையெழுத்து வேண்டும் எனக் கூறுவது, பொது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கட்டணம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என, பார்ப்போர் அதிகரித்துள்ளனர். ஓட்டளிக்க புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை அவசியம் என்பதால், அதை தேடும் பணியையும் துவக்கி உள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டையை தவற விட்டவர்கள், அதை பெறுவதற்காக, அருகில் உள்ள இ - சேவை மையங்களுக்கு செல்கின்றனர். முன்பு இ - சேவை மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், 25 ரூபாய் கட்டணம் பெற்றுக் கொண்டு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கினர்.தற்போது, 'வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலும், 001 படிவத்தில் தேர்தல் தாசில்தாரிடம் கையெழுத்து பெற்று வந்தால் மட்டுமே, அடையாள அட்டை வழங்குவோம்' என, இ - சேவை மைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு வழங்கும் அடையாள அட்டைக்கு, கட்டணம் வசூலிப்பதில்லை.ஆனால், தேர்தல் தாசில்தாரை தேடிச் சென்று கையெழுத்து பெற முடியாதவர்கள், அடையாள அட்டை பெற முடியாத சூழல் நிலவுகிறது.
கோரிக்கை
எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக வரும்போது, உரிய கட்டணத்தை பெற்று, இ - சேவை மையங்களில் அடையாள அட்டை வழங்க, தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement