சென்னை:''பதற்றமான ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை, தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்,'' என, மாநில தேர்தல் கமிஷனர் பழனிகுமார் கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்., 19ல் நடக்க உள்ளது. இதற்கான மனுதாக்கல் நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கியது.தேர்தலை முறையாகவும், அமைதியாகவும்நடத்துவதற்காக, சென்னைக்கு மூன்று பேர்; மற்ற மாவட்டங்களுக்கு தலா ஒருவர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன், மாநில தேர்தல் கமிஷனர் பழனிகுமார், செயலர் சுந்தரவல்லி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, தேர்தல் கமிஷனர் பழனிகுமார் பேசியதாவது:உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மனுக்களை பெறுதல், மனுக்கள் பரிசீலனை, சின்னங்கள் ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும், 'சிசிடிவி' கேமரா வாயிலாக கண்காணிக்க வேண்டும்.இதற்காக, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறைகளில் கேமரா பொருத்தப்பட வேண்டும்.
ஓட்டுச்சாவடிகள், ஓட்டுப் பெட்டிகள் வைப்பு அறை, ஓட்டு எண்ணும் மையங்களில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.வட்டார பார்வையாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களின் பணிகளை கண்காணிக்க வேண்டும். வேட்பு மனுக்களை விருப்பு, வெறுப்பு இன்றி நடுநிலையோடு பரிசீலிக்க வேண்டும்.
மாவட்டங்களில், தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாகவும், முறையாகவும் கடைப்பிடிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.பதற்றமான ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்ய வேண்டும். தேர்தலை வெளிப்படை தன்மையுடனும், சுதந்திரமாகவும் நடத்த, அனைத்து மாவட்ட தேர்தல் பார்வையாளர்களும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு பழனிகுமார் பேசினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement