அவனியாபுரம்:''கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும்,'' என, மதுரை விமான நிலையத்தில் அ.தி.மு.க., எம்.பி., ரவீந்திரநாத் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதற்கு அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு நான் கடிதம் எழுதி உள்ளேன்.முந்தைய தேர்தலில் தோல்விக்கான காரணங்களை நிர்வாகிகள் புரிந்து கொண்டுள்ளனர். தற்போது மறுமலர்ச்சிக்கான காலம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பிரகாசமாக உள்ளது. மதுரை- -தேனி அகல ரயில் பாதை திட்டத்தில் சோதனை ஓட்டம் நடந்துள்ளது, என்றார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement