சென்னை:தி.மு.க. வில் மாவட்ட செயலாளர்கள் தரும் வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்களின் குற்றப்பின்னணியை ஆராய்ந்து வேட்பாளர்களை இறுதி செய்ய கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறும் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி கவுன்சிலர்கள் செய்யும் அடாவடி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விடும். சில நேரம் இதுவே அடுத்த சட்டசபை தேர்தலில் கட்சியின் தோல்விக்கு வழி செய்துவிடும். மாநகராட்சி நகராட்சிகளில் போட்டியிடும் சிலர் குற்றப்பின்னணி உள்ளவர்களாவே இருக்கின்றனர். இவர்கள் பணபலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் மூலம் காய் நகர்த்தி தேர்தலில் சீட் வாங்கி விடுகின்றனர்
இந்த முறை தி.மு.க.வில் போட்டியிடும் வேட்பாளர்களை முடிவு செய்யும் பொறுப்பை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்களிடம் தலைமை ஒப்படைத்துள்ளது. அந்த பட்டியலில் வேட்பாளர்களின் குற்ற பின்னணி. மக்களிடம் கெட்ட பெயர் உள்ளதா என்று உளவுத்துறை மூலம் விசாரித்து வேட்பாளர்களை இறுதி செய்ய கட்சி தலைமையில் முடிவு செய்துள்ளது. எனவே குற்றப்பின்னணி உள்ளவர்கள் இல்லாத வகையில் பட்டியல் தயாரிக்கும் படி மாவட்ட செயலாளர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement