மதுரை:சமீபத்தில் நடந்த ரயில்வே உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் குறித்து விண்ணப்பதாரர்களின் விளக்கம் கேட்கும் முகாம் ஜன., 28 - பிப்., 16 வரை கோட்ட ரயில்வே அலுவலகங்களில் நடத்தப்படுகிறது.
ரயில்வே உதவியாளர் பணிக்கான தேர்வு மற்றும் அதன் முடிவுகளில் சில குறைபாடுகள் உள்ளதாக விண்ணப்பதாரர்கள் ரயில்வே வாரியத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து விசாரிக்க உயர்மட்ட குழுவை ரயில்வே வாரியம் அமைத்துள்ளது. சமீபத்திய தேர்வு முடிவுகள், விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய கையாளப்பட்ட முறை, இரண்டாம் கட்ட தேர்வு ஆகியவை குறித்து இந்த குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்.
தேர்வு சம்பந்தமான கருத்துகள், ஆலோசனைகளை ரயில்வே தேர்வாணையம் www.iroams.com/outreach இணையதளத்தில் ஜன., 28 முதல் பிப்., 16 வரை பதிவிடலாம். குறைகளை கடிதமாக உதவி செயலாளர், ரயில்வே பணியாளர் தேர்வாணையம், 5, டாக்டர் பி.வி.செரியன் கிரசன்ட் சாலை, எத்திராஜ் கல்லூரி பின்புறம், எழும்பூர், சென்னை - 600 008 என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.
பிப்., 16 வரை அலுவலக நாட்களில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அலுவலகங்களில் உள்ள முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரிகளிடம் நேரடி விளக்கம் பெறலாம். தேர்வு அழைப்பு கடிதம், கொரோனா 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றிதழுடன் வரவேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement