சென்னை:'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடுவோர் இரண்டு தவணை தடுப்பூசி போட்ட 90 நாட்களுக்கு பின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்' என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்ட சுற்றறிக்கை:தமிழகத்தில் கொரோனா தடுப்புக்காக இரண்டு தவணை தடுப்பூசி போட்டு ஒன்பது மாதங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என வழிக்காட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதில் பணியாற்றும் அலுவலர்கள் பணியாளர்களின் நலனுக்காக புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்படுகிறது.
அதன்படி தேர்தல் பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு 90 நாட்கள் நிறைவு பெற்றிருந்தால் அவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதியானவர்களாக அறிவிக்கப்படுகின்றனர்.தேர்தல் பணியில் ஈடுபடுவோர் கோவின் செயலியில் முன்கள பணியாளர்கள் வரிசையில் சேர்க்கப்படுகின்றனர். தங்களின் ஆதார் எண் அளித்து அவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தேர்தல் அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement