இது உங்கள் இடம்: ஸ்டாலின் மவுனம் சாதிப்பது ஏன்?

Updated : ஜன 29, 2022 | Added : ஜன 29, 2022 | கருத்துகள் (93) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரியலுார் மாவட்டம், திருமானுார் ஒன்றியம், வடுகபாளையத்தைச் சேர்ந்த ௧௭ வயது மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் ஒன்றியம், மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ௧௨ம் வகுப்பு படித்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneஉலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்latest tamil newsக.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரியலுார் மாவட்டம், திருமானுார் ஒன்றியம், வடுகபாளையத்தைச் சேர்ந்த ௧௭ வயது மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் ஒன்றியம், மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ௧௨ம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளியின் அருகில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி படித்த அம்மாணவியை, பள்ளியின் நிர்வாகிகள் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதால், கொடுமைப்படுத்தியதால் மனம் உடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தக் கொடுமையான நிகழ்விற்கு, இன்று வரை அரசிடமிருந்தோ, கல்வித் துறையிடம் இருந்தோ, காவல் துறையிடமிருந்தோ சரியான விளக்கமும் இல்லை; துரித நடவடிக்கையும் இல்லை.


latest tamil news
காவல் துறை பொறுப்பு, முதல்வர் வசம் தான் உள்ளது. அவர் நினைத்திருந்தால், 24 மணி நேரத்தில் துரித நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஏன் மவுனம் சாதிக்கிறார் என்று தெரியவில்லை. எட்டு தனிப்படைகள் அமைத்து, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய அவசரம் காட்டிய முதல்வரால், இந்த விவகாரத்தில் ஏன் அவசரம் காட்ட முடியவில்லை.

நான்கு மணி நேரத்தில் கடும் குற்றவாளிகளை கைது செய்யும் காவல் துறையின் கைகளை கட்டிப் போட்டது யார்? மாணவியரை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது மற்றும் மதம் மாறச் சொல்லி வற்புறுத்துவது போன்ற சம்பவங்கள் எல்லாம், தற்போது கல்வி நிறுவனங்களில் தான் அடிக்கடி நடந்து வருகின்றன.

கல்வி கண்களை திறங்கள் என்றால், கண்டதை எல்லாம் திறக்கவும், கண்டதை எல்லாம் போதிக்கவும் தான், பலர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மதம் என்பது பிறப்பில் உருவாவது. மதம் மாறுவது அவரவர் விருப்பம். யானை போன்ற விலங்குகளுக்கு தான் 'மதம்' பிடிக்கும். மனிதனுக்கு மதம் பிடித்து, மற்றவர்களை மதம் மாறும்படி நிர்ப்பந்தம் செய்தது கடும் தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

கல்வி நிறுவனங்களில், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வதோடு, குற்றம் புரிந்த நபர்களையும் தண்டிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அதைச் செய்வாரா?

Advertisement
வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
30-ஜன-202211:55:36 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN பெயரே மைக்கேல்பட்டி இந்தப் பெயரே பல விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
29-ஜன-202216:42:52 IST Report Abuse
Svs Yaadum oore //...ஆசுபத்திரி, தொழிக்கல்வி கூடங்கள், கல்விக்கூடங்கள், கருணை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், தொழுநோயாளர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் ....//....இதெல்லாம் வெள்ளைக்காரன் கொள்ளையடித்த பணத்தில் விளைந்ததா ? . அல்லது இங்குள்ள கிறிஸ்துவன் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்து சம்பாரித்து இங்குள்ள ஹிந்துக்களுக்கு கட்டி கொடுத்தானா ? . என்னமோ ஓசியில் ஹிந்துக்களுக்கு தானம் செய்தது மாதிரி கூப்பாடு . 300 ஆண்டும் காலம் இங்கிருந்து ஆங்கிலேயன் சுரண்டிய பணம் எத்தனை லட்சம் கோடிகள்? . இந்த தொண்டு நிறுவனங்களுக்கு வெள்ளைக்காரன் சும்மா தானமாக பணம் அனுப்பறானா ? . 7 ஆண்டு காலம் வெளி நாட்டு பணம் நின்றுபோனதாக எதுக்கு ஒரு பேராயன் புலம்பறான்? ? . உழைத்து சம்பாதித்து கிறிஸ்துவன் ஊழியம் செய்ய மாட்டானா ? .
Rate this:
Cancel
29-ஜன-202216:41:53 IST Report Abuse
S SRINIVASAN There is no point in talking about this with the present DMK government it is Pro other religion than Hindu. this government only no to break the temples they will not touch Church or mask as they need vote bank. This government instead of installing confident among People they escape from responsibility.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X