வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன் : “அமெரிக்க மக்களை, ஜோ பைடன் முட்டாள்களைப் போல நடத்தி வருகிறார்,” என, 'டெஸ்லா'வின் சி.இ.ஓ., எலான் மஸ்க் கடுமையாக சாடி உள்ளார்.
பங்களிப்பு
![]()
|
அமெரிக்காவில் உள்ள முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான, 'ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு மோட்டார்' ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன், அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் கலந்து உரையாடினார். அதில், நாட்டின் வளர்ச்சிக்கு, கார் தயாரிப்பு துறைகளின் பங்களிப்பு குறித்தும், மின்சார வாகனங்களுக்கான எதிர்காலம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு, பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் சி.இ.ஓ., எலான் மஸ்கிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.கூட்டத்திற்குப் பின், அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ''அமெரிக்காவில், ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு போன்ற நிறுவனங்கள், முன்பைவிட, தற்போது அதிக எண்ணிக்கையிலான மின்சார வாகனங்களை தயாரித்து வருகின்றன,'' என்றார்.
![]()
|
பைடனின் பேச்சால் ஆத்திரமடைந்த எலான் மஸ்க், அவரை கடுமையாக சாடி உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறுகையில், “ஜோ பைடன் ஒரு பொம்மை மனிதர். அவர் அமெரிக்க மக்களை முட்டாள்களைப் போல நடத்தி வருகிறார்,” என, சாடினார்.
விமர்சனம்
ஏற்கனவே, கடந்த செப்டம்பரில், ஜோ பைடன் நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக எலான் மஸ்க் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement