100 பறவைகள் மர்ம மரணம்

Updated : ஜன 29, 2022 | Added : ஜன 29, 2022 | கருத்துகள் (1)
Advertisement
அகர்தலா : திரிபுராவில் உள்ள சுக்சாகர் ஏரியில் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன.இங்கு கோமதி மாவட்டத்தில் உள்ள சுக்சாகர் ஏரிக்கு ஏராளமான வெளிநாட்டு பறவை கள் ஆண்டுதோறும் வருவது வழக்கம்.சமீபத்தில் இந்த ஏரிக்கு வந்த 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் உயிரிழந்த நிலையில் கிடந்தன. அதன் புகைப்படங்களையும், 'வீடியோ'க்களையும்,
100 பறவைகள்,  மர்ம மரணம்,


அகர்தலா : திரிபுராவில் உள்ள சுக்சாகர் ஏரியில் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன.


இங்கு கோமதி மாவட்டத்தில் உள்ள சுக்சாகர் ஏரிக்கு ஏராளமான வெளிநாட்டு பறவை கள் ஆண்டுதோறும் வருவது வழக்கம்.சமீபத்தில் இந்த ஏரிக்கு வந்த 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் உயிரிழந்த நிலையில் கிடந்தன. அதன் புகைப்படங்களையும், 'வீடியோ'க்களையும், அப்பகுதி மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.



இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அந்த பறவைகளின் உடல்களை மீட்டு, அகர்தலாவில் உள்ள விலங்குகள் வள மேம்பாட்டுத் துறை மையத்திற்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.ஏரியின் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - madurai,இந்தியா
29-ஜன-202206:53:24 IST Report Abuse
தமிழன் இன்று இருப்பது என்ன விவசாயமோ? நாம என்ன சாப்பிடறோமோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X