இந்தியாவுக்கு ரஷ்ய ஏவுகணை; அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

Updated : ஜன 29, 2022 | Added : ஜன 29, 2022 | கருத்துகள் (13)
Advertisement
வாஷிங்டன் : இந்தியாவுக்கு 'எஸ் - 400' ஏவுகணை வழங்கி, ஆசிய பிராந்தியத்தில் ஸ்திரமற்ற சூழலை உருவாக்க ரஷ்யா முயற்சிப்பதாக அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது.38 ஆயிரம் கோடி கடந்த, 2018 அக்.,ல் ரஷ்யாவிடம் இருந்து ஐந்து 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை, 38 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது.தரையில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் இந்த

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


வாஷிங்டன் : இந்தியாவுக்கு 'எஸ் - 400' ஏவுகணை வழங்கி, ஆசிய பிராந்தியத்தில் ஸ்திரமற்ற சூழலை உருவாக்க ரஷ்யா முயற்சிப்பதாக அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது.


38 ஆயிரம் கோடி
latest tamil newsகடந்த, 2018 அக்.,ல் ரஷ்யாவிடம் இருந்து ஐந்து 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை, 38 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது.தரையில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் இந்த நவீன ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கு, அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும், ஏவுகணைகளை வாங்கினால், இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.ஆனால் இதற்கு அஞ்சாத இந்தியா, 'நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை' எனக் கூறி, திட்டமிட்டபடி ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படும் என தெரிவித்து விட்டது.


latest tamil newsஇந்நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது:இந்தியா, ரஷ்யாவிடம் 'எஸ் - 400' ஏவுகணை சாதனம் வாங்குவது குறித்த அமெரிக்காவின் கவலை நீடிக்கிறது. பொருளாதார தடைரஷ்யா, ஆசிய பிராந்தியத்தில் மட்டுமின்றி அதை தாண்டியும் ஸ்திர மற்ற சூழலை உருவாக்க முயற்சிக்கிறது.

இதற்கு, இந்தியாவின் எஸ் - 400 ஏவுகணை ஒப்பந்தம் வலு சேர்க்கும். ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கும் முடிவை அமெரிக்கா இன்னும் எடுக்கவில்லை. இது தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yavarum kelir - yadhum vore ,இந்தியா
02-பிப்-202211:15:44 IST Report Abuse
yavarum kelir வான்
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
29-ஜன-202212:42:02 IST Report Abuse
pradeesh parthasarathy ஐந்து 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை, 38 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது/////////////////// இதிலே எத்தனை கோடி கமிஷன் பாத்தீங்களா ..... எவன் வீட்டு காசு .... ?கேட்டா மதத்தை இழுத்து போட்டு மற்றவன் கண்களை குருடாக்கும் வித்தை ..... நாடு விளங்கிடும் ...
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30-ஜன-202204:49:11 IST Report Abuse
NicoleThomsonகமிஷன் வாங்கியே குடும்பத்தை சேர்த்த கட்சியினருக்கு அப்படிதான் கண்னுக்கு தெரியும்...
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
29-ஜன-202212:26:00 IST Report Abuse
John Miller வெறும் நான்கு ஏவுகணைகளை நாற்பது ஆயிரம் கோடிகள் என்றால் அதில் கமிஷன் எவ்வளவு? அக்னி பிரம்மோஸ் ஆரியபட்டா எல்லாம் தீபாவளியின் போது மோடி பட்டாசு வெடித்து கொண்டாடவா?
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30-ஜன-202204:50:17 IST Report Abuse
NicoleThomsonஇருக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X