கருத்து சுதந்திரத்துக்கு எதிராக செயல்படும் தி.மு.க.,; பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆவேசம்

Updated : ஜன 29, 2022 | Added : ஜன 29, 2022 | கருத்துகள் (85) | |
Advertisement
சென்னை : 'கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் வகையில், தி.மு.க., அரசு தொடர்ந்து செயல்பட்டால், அதை பார்த்து கொண்டு, பா.ஜ., அமைதியாக இருக்காது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழக காவல் துறை தன்னுடைய பெருமையையும், கண்ணியத்தையும் துறந்து, தி.மு.க.,வின் கைப்பாவையாக செயல்படுவதை, மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டு இருக்கிறது. அதற்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : 'கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் வகையில், தி.மு.க., அரசு தொடர்ந்து செயல்பட்டால், அதை பார்த்து கொண்டு, பா.ஜ., அமைதியாக இருக்காது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



latest tamil news



அவரது அறிக்கை: தமிழக காவல் துறை தன்னுடைய பெருமையையும், கண்ணியத்தையும் துறந்து, தி.மு.க.,வின் கைப்பாவையாக செயல்படுவதை, மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டு இருக்கிறது. அதற்கு உதாரணமாக, சமீபத்தில் எல்லா பத்திரிக்கைகளிலும், 130க்கும் மேற்பட்ட ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை மேற்கொள்காட்டி, 'சுதந்திரத்திற்கு முன் கூட, இப்படி அடக்குமுறை நடந்ததில்லை.


latest tamil news



'உள்ளாட்சியிலாவது நல்லாட்சி மலர வேண்டும்' என்று, பா.ஜ., இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் எந்தவிதமான கண்ணிய குறைவான வாசகங்களோ, மத கலவரம் துாண்டும் செய்திகளோ இல்லை. அவர்கள் செய்யும் தவறை பொது மக்கள் சுட்டிக் காட்டுவதை, தி.மு.க., விரும்பவில்லை என்பது வெளிச்சமாகிறது.

வினோஜ் செல்வம் பதிவையும், வழக்குப்பதிவையும் மேற்கோள்காட்டி, 'இதுபோல பதிவிடும் பொது மக்களை 'அரெஸ்ட்' செய்வோம்' என்று சென்னை காவல் ஆணையர் கடிதம் வெளியிட்டு உள்ளார். இது, அச்சுறுத்தலா அல்லது அத்துமீறலா? நடவடிக்கை எடுத்தால் வினோஜ் செல்வத்திற்கு பா.ஜ., துணை நிற்கும். கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் வகையில், தி.மு.க., அரசு தொடர்ந்து செயல்பட்டால், அதை பார்த்து கொண்டு, பா.ஜ., அமைதியாக இருக்காது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30-ஜன-202205:08:30 IST Report Abuse
NicoleThomson கருத்து சுதந்திரம் இருங்க இருங்க மைக்கேல்பட்டியில் கேட்டு சொல்கிறேன் , தனிமனித சுதந்திரம் இருங்க இருங்க மீசைக்காரரிடம் கேட்டு சொல்கிறேன்
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
29-ஜன-202218:16:28 IST Report Abuse
sankar /////
Rate this:
Cancel
29-ஜன-202217:01:37 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் "'உள்ளாட்சியிலாவது நல்லாட்சி மலர வேண்டும்' என்று, பா.ஜ., இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டிருந்தார். " நடக்கப்போவது உள்ளாட்சி (நகராட்சி) தேர்தல் ஏற்கனவே மாநிலத்தில் அமைந்துள்ள ஆட்சிக்கு இதனால் பாதிப்பு வராது ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்ற பொருளில் எழுதியிருக்கிறாரே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X