வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜன., 1 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதை நிறுத்தி வைக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.
![]()
|
கூட்டுறவு துறை நடத்தும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 2021 பிப்., ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. அதில் அடிப்படை ஊதியத்தில், 14 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்பட்டது.அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஆனால், ரேஷன் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.
![]()
|
இது குறித்து, கூட்டுறவு சங்கங்களின் நுகர்வோர் பணிகளுக்கான கூடுதல் பதிவாளர் அருணா, அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை: தமிழக அரசு ஊழியர்கள், அலுவலர்களுக்கு, 2022 ஜன., 1 முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு ரேஷன் கடை விற்பனையாளர்கள், எடையாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து வெளியிடப்பட்ட அரசாணையில், 'புதிய அடிப்படை ஊதியத்தில் 14 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும்' என்று, மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு பின், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு குறித்து, எவ்வித தகவலும் அரசாணையில் குறிப்பிடப்படவில்லை. எனவே, அகவிலைப்படி உயர்வு குறித்த ஆணை, அரசிடம் இருந்து பெறப்படும் வரை, ரேஷன் கடை ஊழியர்களுக்கு, ஜன., முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதை நிறுத்தி வைக்க, தங்கள் மண்டலத்தில் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: ரேஷன் ஊழியர் ஊதிய உயர்வுக்கான புதிய அரசாணையில், முந்தைய அரசாணைகளில் இருந்ததுபோல், 'அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தும்போது, ரேஷன் ஊழியர்களுக்கும் பொருந்தும்' என்ற வாசகம் இடம்பெறவில்லை.
இதனால் தற்போது, அரசு ஊழியர்களுக்கு உயர்த்திய அகவிலைப்படி உயர்வை, ரேஷன் ஊழியர்களுக்கு வழங்குவதில் குழப்பம் இருப்பதாக கூறி, அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது.அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில், ரேஷன் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. எனவே, அரசு ஊழியர்களுக்கு இணையாக விரைந்து அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement