வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : இந்தியாவில் 2021ல் தங்கம் தேவை 79 சதவீதம் அதிகரித்து, 797.30 டன்னாக இருந்தது என உலக தங்க கவுன்சில் அமைப்பு தெரிவித்துள்ளது.
'வீடியோ கன்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில், உலக தங்க கவுன்சில் அமைப்பின் இந்தியாவுக்கான தலைமை செயல் அதிகாரி சோமசுந்தரம் கூறியதாவது: உலக தங்க தேவை, 2021ல், 50 சதவீதம் உயர்ந்து 4,021 டன்னாக இருந்தது. இது 2020ல், 3,659 டன்னாக குறைந்திருந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு, தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் வெற்றி, பொருளாதார வளர்ச்சி, பண்டிகை சீசன் உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் 2021ல் தங்கம் விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகரித்தது.

அந்த ஆண்டில், இந்தியாவில் தங்கம் தேவை 79 சதவீதம் அதிகரித்து, 797.30 டன்னாக இருந்தது. இது 2020ல், 446 டன்னாக குறைந்திருந்தது. இதே காலத்தில் மதிப்பின் அடிப்படையிலான தங்கம் தேவை, 1.88 கோடி லட்சம் ரூபாயில் இருந்து, 3.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆபணரங்களுக்கான தங்கம் தேவை 2021ல் 316 டன்னில் இருந்து 611 டன்னாகவும்; முதலீட்டிற்கான தங்கம் தேவை 130 டன்னில் இருந்து 186 டன்னாகவும் அதிகரித்துள்ளன.
இந்தியாவில், 2021ல் தங்கம் இறக்குமதி 924 டன்னாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 349 டன்னாக இருந்தது. இதே காலத்தில் மறு சுழற்சிக்கான தங்கம், 95.50 டன்னில் இருந்து 75 டன்னாக குறைந்துள்ளது. மேலும், 2021ல் அக்., முதல் டிச., வரையிலான நான்காவது காலாண்டில், இந்தியாவின் தங்கம் தேவை 85 சதவீதம் 186 டன்னில் இருந்து, 344 டன்னாக அதிகரித்துள்ளது. அதில், ஆபரண தங்கம் 265 டன்னாகவும்; முதலீட்டிற்கான தங்கம் 79 டன்னாகவும் உயர்ந்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE