பாராலிம்பிக் மாரியப்பன் தம்பி போலீசில் தஞ்சம்| Dinamalar

பாராலிம்பிக் மாரியப்பன் தம்பி போலீசில் தஞ்சம்

Added : ஜன 29, 2022 | கருத்துகள் (12) | |
ஓமலுார் : சேலம் மாவட்டம், பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 43, தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனு: கடந்த 27ல், என் மகள் பவித்ரா, 20, வீட்டில் இருந்து மாயமானார். விசாரித்ததில், பாராலிம்பிக் மாரியப்பனின் தம்பியான, பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் கோபி, 24, கடத்திச்சென்றது தெரிந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில்
பாராலிம்பிக் மாரியப்பன் தம்பி போலீசில் தஞ்சம்

ஓமலுார் : சேலம் மாவட்டம், பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 43, தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனு: கடந்த 27ல், என் மகள் பவித்ரா, 20, வீட்டில் இருந்து மாயமானார். விசாரித்ததில், பாராலிம்பிக் மாரியப்பனின் தம்பியான, பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் கோபி, 24, கடத்திச்சென்றது தெரிந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கோபி -- பவித்ரா திருமணம் செய்து கொண்டு ஓமலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருதரப்பிலும் பேச்சு நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X