பொது இடத்தில் குப்பை: தங்கும் விடுதிக்கு அபராதம்

Added : ஜன 29, 2022 | |
Advertisement
மூணாறு- -பழைய மூணாறில் ஹெட் ஒர்க்ஸ் அணை அருகே விதிமுறைகள்மீறி பொது இடத்தில் குப்பைகளை கொட்டிய தனியார் தங்கும் விடுதி உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மூணாறு ஊராட்சியில் வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல், குடியிருப்பு ஆகியவற்றில் இருந்து குப்பைகள் தரம் பிரித்து கட்டண அடிப்படையில் சேகரிக்கப்படுகிறது. அதனை மீறி போதமேட்டில் செயல்படும் தனியார் தங்கும்

மூணாறு- -பழைய மூணாறில் ஹெட் ஒர்க்ஸ் அணை அருகே விதிமுறைகள்மீறி பொது இடத்தில் குப்பைகளை கொட்டிய தனியார் தங்கும் விடுதி உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மூணாறு ஊராட்சியில் வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல், குடியிருப்பு ஆகியவற்றில் இருந்து குப்பைகள் தரம் பிரித்து கட்டண அடிப்படையில் சேகரிக்கப்படுகிறது. அதனை மீறி போதமேட்டில் செயல்படும் தனியார் தங்கும் விடுதியின் குப்பைகளை ஹெட் ஒர்க்ஸ் அணை அருகே கொட்டினர்.அது குறித்து மூணாறு ஊராட்சி அதிகாரிகள் விசாரித்து விடுதி உரிமையாளரிடம் இருந்து அபராதம் ரூ.10 ஆயிரம் வசூலித்தனர்." குப்பைகளை தரம் பிரித்தும், கட்டணம் வழங்காதவர்கள், பொதுஇடங்களில் குப்பைகளை கொட்டுவோர் ஆகியோர் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என ஊராட்சி தலைவர் பிரவீனா,செயலர் சகஜன் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X