இந்தியா-பாக்., பிரிவினையின்போது பிரிந்த சகோதரர்கள்; 74 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கவுள்ளனர்

Updated : ஜன 29, 2022 | Added : ஜன 29, 2022 | கருத்துகள் (1)
Advertisement
டில்லி: இந்தியா-பாக்., பிரிவினையின்போது பிரிந்த இஸ்லாமிய சகோதரர்கள் 74 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்க மத்திய அரசின் தீவிர முயற்சியால் பாக்., உயர் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது. கர்தார்பூர் சாஹிப் சதுக்கத்தில் எழுபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது சிறுவர்களாக பிரிந்த இரண்டு இஸ்லாமிய சகோதரர்கள் தற்போது பாகிஸ்தான் உயர் கமிஷன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


டில்லி: இந்தியா-பாக்., பிரிவினையின்போது பிரிந்த இஸ்லாமிய சகோதரர்கள் 74 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்க மத்திய அரசின் தீவிர முயற்சியால் பாக்., உயர் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது.



latest tamil news


கர்தார்பூர் சாஹிப் சதுக்கத்தில் எழுபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது சிறுவர்களாக பிரிந்த இரண்டு இஸ்லாமிய சகோதரர்கள் தற்போது பாகிஸ்தான் உயர் கமிஷன் மற்றும் இந்திய அரசின் அனுமதி காரணமாக சந்திக்க உள்ளனர்.


இந்தியா விடுதலை பெற்ற 1947ஆம் ஆண்டு முகமது அலி ஜின்னா தலைமையில் பிரிவினைவாதிகள் இஸ்லாமியர்களுக்கு வங்கதேசம், பாகிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


latest tamil news



அந்நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் இரண்டு வாய்ப்புகள் தரப்பட்டன. பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்குச் செல்ல விரும்பும் இஸ்லாமியர்கள் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு இந்த இரு நாடுகளுக்கும் குடியேறலாம் என்றும் இந்தியாவிலேயே தங்க விரும்பும் இஸ்லாமியர்கள் இங்கேயே இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.


அந்நேரத்தில் பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பிய இஸ்லாமியர்கள் பலர் தங்கள் நிலங்கள், வீடுகளை விற்றுவிட்டு உடைமைகளுடன் எல்லை தாண்டிச் சென்றனர்.

இவர்களில் குழந்தைகள், பெண்கள் ஆகியோரும் அடக்கம். இதுபோன்ற பிரிவினை நிறைந்த காலகட்டத்தில் பல சகோதர, சகோதரிகள் பிரியும் அவலநிலை ஏற்பட்டது. இதேபோல சிகா கான், முகமது சித்திக் ஆகிய இரு சகோதரர்களும் 1947-ஆம் ஆண்டு பிரிந்தனர்.


இந்தியாவில் தங்கிவிட்ட சிகா கான் திருமணமாகி, குழந்தைகள் பெற்று, வயதாகி பேரப்பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது சகோதரர் முகமது சித்திக் மற்றும் குடும்பத்தினர் பாகிஸ்தானில் எங்கு இருக்கிறார்கள் என்று சிகா கானுக்கு தெரியவில்லை.

சமீபத்தில் அவர் பாகிஸ்தானில் இருக்கும் இடம் கண்டறியப்பட்ட நிலையில் அவரை சந்திக்க சிகா கான் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை பாகிஸ்தான் உயர் கமிஷனிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக சிகா கான் தனது சகோதரர் முகமது சித்திக்கை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.


இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாகிஸ்தான் உயர் கமிஷன் உறுதிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு இணையத்தில் பலர் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
29-ஜன-202212:33:04 IST Report Abuse
PRAKASH.P We should try to connect back pak and Bangladesh to India...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X