தடுப்பூசி பற்றிய பொய் செய்தியை நம்ப வேண்டாம்: போப் பிரான்சிஸ்

Updated : ஜன 29, 2022 | Added : ஜன 29, 2022 | கருத்துகள் (13)
Advertisement
ரோம் : ''கொரோனா மற்றும் தடுப்பூசிகள் குறித்த பொய் செய்திகளை நம்ப வேண்டாம்'' என, போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.ஐரோப்பாவின் ரோம் நகரில், கொரோனா குறித்த பொய் செய்திகளை தோலுரித்துக் காட்டும் கத்தோலிக்க செய்தியாளர்கள் குழுவுக்கு போப் பிரான்சிஸ் பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது: கொரோனா பரவல் குறித்தும், அதற்கான தடுப்பூசி பற்றியும் பொய்யான தகவல்கள்
Pope Francis, Vaccine, Corona Vaccine

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ரோம் : ''கொரோனா மற்றும் தடுப்பூசிகள் குறித்த பொய் செய்திகளை நம்ப வேண்டாம்'' என, போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் ரோம் நகரில், கொரோனா குறித்த பொய் செய்திகளை தோலுரித்துக் காட்டும் கத்தோலிக்க செய்தியாளர்கள் குழுவுக்கு போப் பிரான்சிஸ் பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது: கொரோனா பரவல் குறித்தும், அதற்கான தடுப்பூசி பற்றியும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவற்றை நம்பாமல், அறிவியல் தரவுகளின் அடிப்படையில் துல்லியமான தகவல்களை அறிவது மனித உரிமையாகும்.


latest tamil news


குறிப்பாக, வலைதளங்களில் காணப்படும் தகவல்களில், உண்மை எது, பொய் எது என்பதை ஆராய்ந்து பார்க்கும் திறன் இல்லாதோருக்கு துல்லிய விபரங்கள் சென்றடைய வேண்டும். பொய் செய்திகள் மறுக்கப்பட வேண்டும்.

அதேசமயம் போதிய விழிப்புணர்வு அல்லது பொறுப்பின்றி கிடைக்கும் தகவல்களை நம்பும் தனிநபரின் மரியாதையும் காக்கப்பட வேண்டும். பொய் தகவல் என்ற வலையில் விழுந்தோரிடம் கருணையுடன் பேசி, உண்மையை எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பு கத்தோலிக்க திருச்சபைக்கு உள்ளது என்று கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜன-202201:49:55 IST Report Abuse
அப்புசாமி போப் தடுப்பூசி, பூஸ்டர் போட்டுக்கிட்டாரான்னு மக்களுக்கு தெரியப் படுத்தலாமே...
Rate this:
Cancel
29-ஜன-202216:13:32 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ஊழியம் செய்பவர்கள் கற்பழிப்பு நாயகர்களாக இருக்கக் கூடாது என்று அறிவித்துவிட்டீர்களா போப் அவர்களே ?
Rate this:
Cancel
Matram Ondre Marathathu - Chennai,இந்தியா
29-ஜன-202213:32:54 IST Report Abuse
Matram Ondre Marathathu தடுப்பூசியை வேண்டாம் என்று தான் சொல்றோம். ஆண்டவன் இருக்கான் அவனுக்கு தெரியும். நாங்கள் தினமும் அவரிடம் முறையிடுவோம். அவரு எங்க பக்கம் நோயே வராம பார்த்து கொல்வார். நாங்கள் மரிக்க மாட்டோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X