கம்பம் --நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பொங்கல் தொகுப்பு, 'நீட்' தேர்வு விவகாரங்களை பிரசாரத்தில் பிரதானப்படுத்த அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர். சட்டசபை தேர்தல் தோல்வியை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈடுகட்ட அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.இதற்கான பிரச்சார வியூகங்கள் வகுத்துள்ளது. அ.தி.மு.க., பிரச்சாரத்தில் பிரதானமாக பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட தரமற்ற பொருட்கள் குறித்தும், ஆட்சிக்கு வந்தால்'நீட்' தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., வின் பொய் பிரச்சாரம் பற்றி விரிவாக எடுத்துக் கூற முடிவு செய்துள்ளது. தங்கள் வேட்பாளர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் இந்த விவகாரத்தை விரிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது. இத்துடன் உள்ளூர் பிரச்னைகளையும் விளக்கி பேச அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு விசயங்களும் தி.மு.க.,விற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE