கூடலுார் நகராட்சியை கைப்பற்ற அ.தி.மு.க., - தி.மு.க.,தீவிரம் | Dinamalar

கூடலுார் நகராட்சியை கைப்பற்ற அ.தி.மு.க., - தி.மு.க.,தீவிரம்

Added : ஜன 29, 2022 | |
கூடலூர்--கூடலூர் நகராட்சியை கைப்பற்றுவதில் தி.மு.க.,- அ.தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.ம.மு.க., வினர் தனித்து களம் இறங்குவதால் இரு கட்சிகளுக்கும் தலைவலியைக் கொடுக்கும்.கூடலூர் நகராட்சியாக 2004 ல் தரம் உயர்த்தப்பட்ட போது, அப்போது பேரூராட்சி தலைவராக இருந்த தி.மு.க.,வைச் சேர்ந்த பி.வி.பாண்டியன் முதல் நகராட்சி தலைவரானார். அதன்பின் 2006ல் காங்கிரஸ்

கூடலூர்--கூடலூர் நகராட்சியை கைப்பற்றுவதில் தி.மு.க.,- அ.தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.ம.மு.க., வினர் தனித்து களம் இறங்குவதால் இரு கட்சிகளுக்கும் தலைவலியைக் கொடுக்கும்.கூடலூர் நகராட்சியாக 2004 ல் தரம் உயர்த்தப்பட்ட போது, அப்போது பேரூராட்சி தலைவராக இருந்த தி.மு.க.,வைச் சேர்ந்த பி.வி.பாண்டியன் முதல் நகராட்சி தலைவரானார். அதன்பின் 2006ல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயசுதா நகராட்சியின் முதல் பெண் தலைவராக பதவியேற்றார். 2011ல் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அருண்குமார் நகராட்சித் தலைவர் ஆனார்.அ.தி.மு.க., வசம் இருந்த நகராட்சியை தற்போது ஆளும் கட்சியான தி.மு.க., கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதற்கான வியூகத்தை முன்கூட்டியே வகுத்து வேட்பாளர்களை தேர்வு செய்து களம் காண உள்ளனர். 2006 -க்கு பின்னர் எப்படியும் நகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தி.மு.க.,தொண்டர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அதேவேளையில் சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஈடுகட்டும் வகையில் அ.தி.மு.க.,வினர் நகராட்சித் தலைவர் பதவியை எப்படியும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கிவருவதால் அ.தி.மு.க., தொண்டர்கள் தேர்தல் பணியில் முனைப்பு காட்டி வருகின்றனர். இதனிடையில் அ.ம.மு.க., வினர் தனித்து களம் இறங்குவதால் கூடலூரில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X